November 16, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டக் காவல் அலுவலகத்தில் இளம் காவல் உதவி ஆய்வாளர்களின் விசாரணைத் திறனை மேம்படுத்த இன்று முதல் ஒரு மாதத்திற்கு “விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி” நடைபெற உள்ளது.
இப்பயிற்சியினை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா துவக்கி வைத்தார். இத்துவக்க விழாவில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர் மற்றும் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு ஆகியோர்கள் பங்கேற்றனர்.
இப்பயிற்சியில் கோவை சரகத்தில் உள்ள கோவை, திருப்பூர்,ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 40 உதவி ஆய்வாளர்களுக்கு காணொளி காட்சி மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.இப்பயிற்சியில் காலை யோகா, உடற்பயிற்சியும், அதன் பின்னர் விசாரணை திறனை மேம்படுவதற்கான பயிற்சி வகுப்புகள்,மாலை விளையாட்டு என ஒரு மாத கால பயிற்சி வழங்கப்படுகிறது.