• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

November 16, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த முறை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 21,190 பேர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். திமுக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டார்.இன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,97,0733 பேர் இருக்கின்றனர். ஆண் வாக்காளர்1,46,8,222 பேரும்,
பெண் வாக்காளர் 1,50,2,142 பேரும் ,இதரர் 369 பேரும் இருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர் எண்ணிக்கையினை விட 21190 பேர் நீக்கப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்த ஆட்சியர் இறப்பு, இடமாற்றம், இரு முறை பதிவு போன்றவை காரணமாக நீக்கம் அதிகமாக இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். மேலும் வாக்காளர் சேர்ப்பு , நீக்கம் போன்றவற்றிக்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க