• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து தீபாவளியை கொண்டாடுங்கள் – சத்குரு தீபாவளி வாழ்த்து

November 13, 2020 தண்டோரா குழு

”கொரோனா பெருந்தொற்று பரவி வரும் சூழலில், உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து உள்ளுக்குள் அன்பாகவும், ஆனந்தமாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

எல்லோருக்கும் வணக்கம்,

இந்த ஆண்டு தீபாவளி சற்றே வித்தியாசமான ஒரு தீபாவளியாக உள்ளது. நாம் கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றை எதிர்கொண்டு வருகிறோம். வைரஸ் பாதிப்பால் நிறைய பேர் உயிரிழந்துள்ளார்கள். மக்கள் பல விதமான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் தீபாவளியை எப்படி கொண்டாடுவது என நீங்கள் நினைக்கலாம்.

தீபாவளியை சமூகத்துடன் சேர்ந்து தான் கொண்டாட வேண்டும் என்ற தேவை இல்லை. நமக்குள் அன்பாக, ஆனந்தமாக இருந்தால் அதுவே ஒரு பெரும் கொண்டாட்டம் தான். இந்த கொண்டாட்டத்தை நீங்கள் விட கூடாது. தீபாவளி நாளில் நம் வாழ்க்கையில் ஒரு புது வெளிச்சம் வர வேண்டும்.

பெருந்தொற்று சூழலில் உங்கள் நன்மைக்காக ஒரு விளக்கு ஏற்றுங்கள். உங்கள் குடும்பத்துக்காகவும், நண்பர்களுக்காகவும் இன்னொரு விளக்கை ஏற்றுங்கள். மூன்றாவதாக மனித குல நன்மைக்காக ஒரு விளக்கை ஏற்றுங்கள். இவ்வாறு மூன்று விளக்குகளை தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஏற்ற வேண்டும். இது மிக மிக அவசியம். இந்த மாதிரி நேரத்தில் உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து கொண்டாடினால் தான் நமக்கு முன்னேற்றமும் தீர்வும் கிடைக்கும்.

அதேபோல் பாரதத்தின் கைத்தேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் – பன்முகம் கொண்ட கலாச்சாரமும், 120 வகையான கைத்தறிகளும் கொண்ட ஒரே தேசத்தின் தூதுவர்களாய் இருக்கிறார்கள். நம் தறிகள் ஒவ்வொன்றும் அப்பகுதியுடைய பண்பை வெளிப்படுத்துகிறது. இந்த தீபாவளி அன்று நம் தறிகளை பெருமையுடன் அணிந்து அவற்றை காப்போம்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அன்பான தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

மேலும் படிக்க