• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“மோடியின் மகள்’ திட்டம் கோவையில் துவக்கம்

November 12, 2020 தண்டோரா குழு

தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள பெண் குழந்தைகளுக்கென பிரதமரால்
துவங்கப்பட்ட மோடியின் மகள்” என்ற திட்டம். இந்தியா முழுவதும் உள்ள நிலையில் கோவையில் முதல் கட்டமாக இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்துகொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் உள்ள 100 பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது பேசிய அவர் இந்த திட்டத்தில் கீழ் பதிவு செய்துள்ள பெண் குழந்தைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இதில் இணைய விரும்பும் தந்தையை இழந்த பெண் குழந்தைகள் மக்கள் சேவை மையத்தை தொடர்பு கொண்டு சேரலாம் என்றும் கூறினார்.மேலும் அனைத்து குழந்தைகளுக்கும் “மோடியின் மகள்” என்ற பிரதமர் மோடியின் புகைப்படத்தையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பாரத பிரதமர் மோடி எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும் பெண்களுக்கு பயனுள்ளதா என்று ஆழ்ந்து யோசித்து அந்த திட்டத்தை நிறைவேற்றுகிறார். பிரதமர் அறிவித்த செல்வமகள் திட்டத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. மோடியின் மகள் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் தந்தை இறந்த பெண் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை கல்வி உதவித்தொகை கிடைக்கும் என்றும் நன்கு படித்த பெண் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் கழித்தும் தேவையான கல்வி உதவிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு எபிவிபி க்கு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல என்றும் அந்த புத்தகத்தை நீக்குவதற்கு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது. ஏபிவிபி யும் கோரிக்கை விடுத்துள்ளது என்று தெரிவித்தார். வேல் யாத்திரையை தகுந்த கட்டுப்பாடுகளுடன் நடத்த நாங்கள் நடத்துகிறோம். மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்கின்ற வகையில்தான் இந்த வேல் யாத்திரையானது திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இதற்கு ஒத்துழைப்பு அளித்து சுமுகமான முறையில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக தொண்டர்களை கைது செய்துள்ளது என்று தெரிவித்தார். காவல்துறை இதற்கு ஒரு சரியான திட்டத்தை வகுத்து இருந்தால் இந்த யாத்திரை நல்வழியில் முடிந்து இருக்கும் என்று தெரிவித்தார். இந்த வேலி யாத்திரை ஏதோ சட்டத்திற்கு எதிராக நடப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

வேல் யாத்திரைக்கு ஏதேனும் வழக்குகள் எங்கள் மீது வந்தால் அதை நேரில் சந்திக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்கின்றவர்கள் அந்த தாய்மாருக்கு அனைவரும் அவர்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களிடம் அரசியர் தலைவர்களிடம் முதலில் உங்களின் பக்திக்கும் ,உணர்வுகளுக்கும் தெய்வ நம்பிக்கைக்கும் முதலில் மதிப்பளிக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க