November 12, 2020
தண்டோரா குழு
தமிழ்நாடு கேரள எல்லைப்பகுதியான அட்டப்பாடி மட்டத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி அவரது தந்தை மகளை கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டியில் தனது மனைவியின் அக்கா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். மாணவி தனது பெரியம்மா வீட்டிலிருந்தபடியே பத்தாம் வகுப்பு ஆன்லைன் வகுப்பை செல்போனை பயன்படுத்தி கலந்து கொண்டுள்ளார்.
மாணவியின் பெரியம்மா மாணவி படிக்கத்தான் செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் மாணவி ஒரு இளைஞனுடன் செல்போனில் வாட்ஸ் அப்’ செயலியைப் பயன்படுத்தி பேசி வந்துள்ளார். இதைக் கண்ட மாணவியின் பெரியம்மா நீ இனி இங்கு இருக்க வேண்டாம் உன்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ந் தேதி திடீரென தனது தங்கையின் மகளை காணவில்லை என பெரியம்மா சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் செல்போன் என்னை வைத்து விசாரணை மேற் கொண்டனர்.விசாரணையில் அந்த மாணவி காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்த சக்திவேலின் மகன் சஞ்சீவி (22) என்பவருடன் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்த போது அந்த மாணவி காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு சென்று அந்த மாணவியையும், சஞ்சீவியையும் அழைத்து வந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதாவிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த அவர் நடத்திய விசாரணையில் அந்த மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுக் கப்பட்டது.தெரியவந்தது அதனைத் தொடர்ந்து சஞ்சீவி போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.