November 10, 2020
தண்டோரா குழு
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் ஆண்டு தோறும் வேளாண்மை முதுகலைப் படிப்பு மற்றும் பட்ட படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி வருகிறது.
இதில் வெற்றி பெறக்கூடிய மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பு படிக்க ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.குறிப்பாக அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் காளீஸ்வரி(Horticulture) பவித்ரா(Social Sciences) பூஜா(Agri. Engineering) உள்ளிட்டோர் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற அகில இந்திய நுழைவுத் தேர்வில் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக மற்றும் அதை சார்ந்த கல்லூரிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் தேசிய தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக மாணவ மாணவிகள் இடம் பெற்றுள்ளனர்.