• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும்

November 7, 2020 தண்டோரா குழு

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என அக்கட்சியின் மாநில துணை தலைவர் கோவையில் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் பிரபல திரைப்பட நடிகருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் நீதி மையத்தை சேர்ந்த தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட கே.என்.ஜி.காலனியில் சுரபி பில்டு மார்ட் எதிர்புறம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

கவுண்டம்பாளையம் தொகுதி தலைவர் தம்புராஜ் மற்றும் செய்தி மற்றும் ஊடக பிரிவின் மாநில துணை செயலாளர் சுரபி பங்கஜ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பேக் வழங்கப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணை தலைவர் டாக்டர் மகேந்திரன்,

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான அ.தி.மு.க.வின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தேர்தலில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்த போவதாக அவர் தெரிவித்தார்.தொடர்ந்து ஏழை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தேவையான அரிசி பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.தொடர்ந்து சுப்ரமணியம்பாளையம்,கவுண்டம்பாளையம், மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது.விழாவை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 66 கொடிக்கம்பங்கள் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.

மேலும் படிக்க