November 7, 2020
தண்டோரா குழு
ராஜவீதி பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத “1” லட்சத்தி “70” ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக தகவல்கள் கிடைக்கபெற்று வருவதைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு தீயணைப்பு துறை அதிகாரி பட்டாசு உரிமம் வழங்க லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி ஒருவரை கைது செய்தனர்.உரிமம் வழங்க 5000 ரூபாய் பெற்ற அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் கோவை ராஜவீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெறப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் சார்பதிவாளர் கார்த்திகேயன் அறை மற்றும் அலுவலக வளாகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது பதிவாளர் அலுவலகத்தில் இருந்த இடைத்தரகர்கள் மற்றும் பத்திர பதிவிற்கு வந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் கணக்கில் வராத “1” லட்சத்தி “70” ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தகவல் தெரிவிக்கின்றது.