• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈதலின் இன்பத்தோடு, புன்னகையுடன் தீபாவளியை கொண்டாடுவோம்

November 7, 2020 தண்டோரா குழு

சமுதாய முன்னேற்றத்துக்காக சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன், எப்போதும் ஒரு தனித்தன்மை வாய்ந்த பிரச்சாரத்துடன், பசுமை திட்டங்களை செய்து வருகிறது. இந்த தொற்று நோய் சூழ்நிலையிலும், தீபாவளியை முன்னிட்டு இன்று புதிய புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.

போத்தனுார், வடிவு நகரில் நடக்கும் இந்த நிகழ்வில், பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடனும் வழங்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, சந்தின்ஸ் யுவா பவுண்டேஷன் அனைவரையும் அழைத்திருந்தது. கோவிட் 19 வழிகாட்டுதலின் அடிப்படையில் முழு நிகழ்ச்சியும் நடந்தது.

இந்த சமுதாய நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசா மணி மாவட்ட நிர்வாக அதிகாரி டி. ராமதுரை முருகன் விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.

அப்போது அவர்கள் பேசுகையில்,

தொற்று இல்லாத, மாசு இல்லாத தீபாவளியை அனைவரும் கொண்டாடுவோம். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்வோம்’ என்பதை வலியுறுத்தினர். சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் சி. சிவநேசன், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சசிகலா ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

வறுமைக்கோட்டிற்கும் கீழ் உள்ள ஏழை எளிய மக்கள், சுகாதார பணியாளர்கள், குழந்தைகள், அனாதை இல்ல குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த மக்கள் என பயனாளிகளை தேர்வு செய்து, புத்தாடைகளை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் வழங்கியது.

நிகழ்ச்சி முழுவதும் கோவிட் 19 பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி நடந்தது. கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது. முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாப்பான உறையில் புத்தாடைகள் வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. ஈதலின் இன்பத்தை பெற வேண்டுமானால், சுகாதாரமான சூழலில், பாதுகாப்பாக வழங்க இந்த வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன.எஸ்.எஸ்.எஸ்.வி.எம் (SSVM) கல்வி நிறுவனங்கள், தேவையான குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கியது.

மேலும் படிக்க