November 6, 2020
தண்டோரா குழு
முகமது நபியைப் பற்றி அவதூறு செய்தியை கண்டித்து கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரின்ஸ் அரசாங்கம் முகமது நபியை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதை கண்டித்து கோவை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கோவை ஆத்துப்பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் எஸ் எம் பாக்கர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிரின்ஸ் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.