• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கடைவீதிகளில் குவிந்த மக்கள் கூட்டம் – கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் போலீஸார்

November 5, 2020 தண்டோரா குழு

தீபாவளி திருடர்களை பிடிக்கும் விதமாக கண்காணிப்பு கோபுரம் அமைத்து கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர்.

கோவை ஒப்பணக்கார வீதி ராஜவீதி பெரியகடைவீதி கிராஸ்கட் சாலையில் ஏராளமான ஜவுளி கடைகள் உள்ளன இந்த ஜவுளிக்கடைகளில் விழாக்காலங்களில் கூட்டமாக காணப்படும். வருகிற 14-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடைவீதிகளில் புத்தாடை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளது.எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக தெரிகின்றன. அவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக முண்டியடித்து செல்கின்றன.

இதன் காரணமாக அந்த சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.கடந்த ஆண்டு தீபாவளிக்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே பெரியகடை வீதி ஒப்பணக்கார வீதி பகுதிகளில் மக்கள் நடந்து செல்ல சாலையின் ஒரு புறமாக தடுப்புகள் அமைத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.மேலும் தீபாவளி திருடர்களை பிடிக்கும் விதமாக கண்காணிப்பு கோபுரம் அமைத்து கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் அதிகமான மக்கள் துணி வாங்க
வரத் தொடங்கிவிட்டனர்.இதனால் தீபாவளி நெருங்கும் நிலையில் இனிவரும் நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இதனை பயன்படுத்தி தீபாவளி திருடர்கள் மக்களிடம் இருந்து நகை பணத்தை பறிக்க வாய்ப்புள்ளது.

இது சம்மந்தமாக பொதுமக்கள் கூறுகையில் ,

அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு கோவை மாநகர போலீசார் முன்னெச்சரிக்கை யாக கடைவீதிகளில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை அதிகரிக்க வேண்டும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க