• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தலாய் லாமாவுடன் சர்வதேச நேருக்குநேர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை மாணவி

November 4, 2020 தண்டோரா குழு

கோவை கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் 12வது வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி சுந்தரராஜன் என்ற மாணவி, தலாய் லாமா வுடன் நடந்த நேருக்கு நேர் சர்வதேச கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மாணவி பங்கெடுத்ததை தனது மகிழ்ச்சியான தருணம் என்று பள்ளி நிர்வாகம் அறிவிக்கின்றது. இந்த இணையதள நிகழ்ச்சி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண் டேஷன் சார்பில் அப் துல்கலாமின் 89வது பிறந்த தினவிழாவை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டது.

இதில், வாழ்வதற்கேற்ற கிரகம் பூமி மற்றும் அமைதி யான ஒரு உலகத்தை நோக்கி ஒன்றிணைந்து செயலாற்றுதல் என்ற தலைப்பில் மாணவி ஸ்ரீநிதி சுந்தர்ராஜன் பேசினார். டாக்டர் அப்துல்கலாம் கூறியதை மேற்கோள் காட்டி, இதே வேகத்தில் சென்றால் உலகமானது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மட்டும் தான் நிலைத்து நிற்கும் என்ற கருத்தை அவர் பேசினார்.
தலாய்லாமா பேசுகையில், ஒவ்வொருவ ருக்குள்ளும் இருக்கும் அமைதியே உலகத்தை சிறப் பானதாக்கும்` என்றார்.

மேலும் படிக்க