October 30, 2020
தண்டோரா குழு
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபியின் பிறந்த நாள் விழாவான இன்று மீலாது விழா விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு மற்றும் சுன்னத் ஜமாத் யூத் பெடரேஷன் சார்பாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு இலவச உணவு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் ஹாஜி இதயத்துல்லா, சுன்னத் ஜமாத் யூத் பெடரேஷன் நிர்வாகி பைசல், மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் கலந்து கொண்டனர்.