October 29, 2020
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூரைச்சேர்ந்த 19 வயது மாணவி அங்குள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் கோவை இராமநாதபுரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார்.
அதில் அம்மாணவி 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும்போது, திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை கற்றுத்தர ஜெய்சங்கர் (39) என்ற ஆசிரியர் பாடம் நடத்தியுள்ளார். மாணவிகளின் எண்களை வாங்கியவர், அவர்களது செல்போன் எண்னுக்கு திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை குறித்த தகவல்களை அனுப்பியுள்ளார். இதனையடுத்து ஆபாச தகவல்கள் மற்றும் புகைப்படங்களை மாணவிக்கு அனுப்பியுள்ளார். உடனே அவரது எண்ணை துண்டித்துள்ளார்.
இதனையடுத்து கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது போஸ்கோ சட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிந்து, 9 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த பிரச்சனைகள் குறித்து இராம்நாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து காவல் துறையினர் சாமுவேல் ஜெய்சங்கரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.9 ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச குறுச்செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பிய ஆசியர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.