• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேவரின் திரு உருவச் சிலைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை

October 29, 2020 தண்டோரா குழு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா கோவை இருகூரில் தேவரின் திரு உருவச் சிலைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவை விமான நிலையத்தில் dr rmr பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகள் ராம் மோகன் ராவ் வரவேற்பளித்தனர்.நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை டாக்டர் ஆர் எம் ஆர் பாசறை சார்பில் தமிழகம் முழுவதும் கௌரவிக்கப் பட்டு வருகிறது கடந்த ஆண்டு மதுரையில் பிரம்மாண்டமான பேரணி நடத்தி முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவீரன் கட்டபொம்மன் நினைவிடம் ஆன கயத்தாரில் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. தற்போது முத்துராமலிங்க தேவர் 113 ஆவது ஜெயந்தியையொட்டி கோவையில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஆர் எம் ஆர் பாசறை நிர்வாகி தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் டாக்டர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதற்காக சென்னையில் இருந்து கோவை விமானம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் பாசறை நிர்வாகிகள் கோவை கிருஷ்ணராஜ் கௌதம், ஆனந்த பத்மநாபன்.திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தி. விடுதலை களம் நாகராஜ் . தேக்கமலை பூபதி .சேலம் ஜெயக்குமார் பிரேம்குமார் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொண்டர்களின் வரவேற்பு பெற்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ராம் மோகன் ராவ்.

மேலும் படிக்க