October 27, 2020
தண்டோரா குழு
கோவை புறநகர் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் மற்றும் இடிகரை பகுதிகளில் கார், டெம்போ மற்றும் இரு சக்கர வாகனங்கள் கடந்த சில தொடர்ந்து திருட்டு போயி வந்தது. இந்த திருட்டு கும்பலை பிடிக்க தனி சிறப்பு படை அமைக்கப்பட்டு விசாரித்து போலீஸ் வந்தனர்.
விசாரனையில் வாகனங்கள் திருட்டு போன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து சில நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில்,நேற்று முன்தினம் சிறப்பு படை போலீசார் அத்திப்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனையில் நிற்காமல் சென்ற காரை துரத்தி சென்று மடக்கி பிடித்து, காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த உதயநிதி, ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த தன்ராஜ், கோவை பூ மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த முருகேசன் ஆகியோர் என்பதும்,இவர்கள் 3 பேரும் சேர்ந்து இடிகரை, கணேசபுரம் கோட்டைப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்பட பல இடங்களில் கார், இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரனையில், மூவரும் ஏற்கனவே பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த்தும் தெரிய வந்தது.இதனைத்தொடர்ந்து இவர்களிடம் இருந்து ரூபாய் 40 இலட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை புறநகர் பகுதிகளில் தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.