October 26, 2020
தண்டோரா குழு
நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகா நவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் இன்று விஜயதசமி என்றும் வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிகத் தொன்மைக் காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள்.
இத்திருநாளில் வித்தியாரம்பம் செய்தல் ஏடு தொடங்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தபனங்கள் ஆரம்பித்தல் போன்றன ஆரபிப்பதால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.கோவை சித்தாபுதூர் அருகே உள்ள ஐயப்பன் கோவிலில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆயூத பூஜையை தொடர்ந்து வரும் இந்த விஜயதசமி பண்டிகை கொரணா கட்டுப்பாட்டின் காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக இன்று கோவில்களில் குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்க பச்சரிசியில் அ, ஆ, இ என்று எழுத தொடங்குவர். அதன் பின்னர் இன்று நடக்கும் பள்ளி சேர்க்கையில் குழந்தைகள் தங்கள் கல்வியை தொடங்குவார்கள். இன்று குழந்தைகள் விஜயதசமியை முன்னிட்டு கோவிலிக்கு சென்று பச்சரிசியில் முதன் முறையாக எழுத ஆரம்பித்து பின் பள்ளியில் சேர்ந்தால் சிறந்து விளங்குவர் என்பது குழந்தைகளின் பெற்றோர் நம்பிக்கை.