October 19, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று 290 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் ஒரே நாளில் 290 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,108 ஆக உயர்ந்துள்ளது.
மேலும்,கோவையில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது.அதே சமயம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 208 குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,689 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,865 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.