October 19, 2020
தண்டோரா குழு
எனது வாழ்வை தழுவி எடுக்கும் 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இதற்கிடையில்,முத்தையா முரளிதரன் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் ஆகையால் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பலரும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், எனது வாழ்வை தழுவி எடுக்கும் 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகத்தை வழங்கும் என்ற நம்பிக்கையால் தான் என் வாழ்வை திரைப்படமாக எடுக்க சம்மதித்தேன்.
800 திரைப்படத்தில் இருந்து விலகுமாறு சிலர் தரப்பில் இருந்து விஜய் சேதுபதிக்கு கடுமையான அழுத்தம் தரப்படுகிறது. விஜய் சேதுபதியின் வருங்கால திரைப்பயணத்திற்கு தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது எனக் கூறியுள்ளார்.