October 16, 2020
தண்டோரா குழு
மறைந்த அப்துல் கலாம் அறிமுகம் செய்து வைத்த குறைந்த எடையிலான செயற்கை கால்களை அவரது நினைவாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
இந்திய நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியாகவும்,நாட்டின் ஜனாதிபதியாகவும் தனக்கென தனி முத்திரை பதித்து நாட்டுமக்களின் அன்பை பெற்றவர் மறைந்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.. இந்நிலையில் அவரது பிறந்த தினத்தை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில் அவரை நினைவு கூறும் விதமாக கோவை கவுண்டம்பாளையம் ஆறாவது வார்டு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.
அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் அறங்காவலரான சோனாலி பிரதீப் தலைமையில் நடைபெற்ற இதில், குறிப்பாக அப்துல் கலாம் அறிமுகம் செய்து வைத்த குறைந்த எடையிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில்,
அப்துல் கலாமின் நினைவாக தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை கவுரவிக்கும் விதமாக இது போன்று வழங்குவதாகவும் மேலும், இந்த மாதம் முழுவதும் பல்வேறு வகையிலான பயனளிக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பிரதீப் ஜோஸ் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.