• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆம்னி பேருந்துகளின் சேவை இன்று முதல் அதிகரிக்கும்

October 16, 2020 தண்டோரா குழு

ஊரடங்கிற்கு பின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை துவங்கியுள்ள நிலையில், கோவையில் இருந்து ஆம்னி பேருந்துகளின் சேவை இன்று முதல் அதிகரிக்கும் என என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை சக்தி சாலையில் 100 அடி ரோடு அருகே ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.சுமார் 350க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள், கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி, நகர்கோவில், தென்காசி, பெங்களூர், ராஜபாளையம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் ஆம்னி பேருந்துகளின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், சுமார் 6 மாதங்கள் கழித்து தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளின் சேவை துவங்கியுள்ளது.

இது குறித்து கோவையில் உள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில்,

‘‘சுமார் 6 மாத காலமாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. கோவையில் இருந்து இன்று முதல் ஆம்னி பேருந்துகள் படிப்படியாக இயக்கப்படும். இன்று முதல் 30 பேருந்துகள் வரை இயக்கப்படும். அதன் பின், ஒருவார காலத்திற்குள் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் வழிக்காட்டுதல் படி அனைத்து விதிமுறைகளும் பின்பற்றி இயக்கப்படும் என்றனர்.

மேலும் படிக்க