• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண்மைப்‌ பல்கலைக்கழக இளங்கலை மாணவர்‌ சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு ஒத்தி வைப்பு

October 15, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக இளங்கலை மாணவர்‌ சேர்க்கை 2020-2021 தரவரிசை பட்டியல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கிவரும் 14 உறுப்புக்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ 28 இணைப்புக்‌ கல்லூரிகளில்‌ பயிற்றுவிக்கப்படும் பத்து (10) இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு 2020-2021 ஆம்‌ வருடத்திற்கான மாணவர்‌ சேர்க்கை தொடர்பான சான்றிதழ்‌ சரிபார்ப்பு இணையதள வாயிலாக நடைபெற்று வருகிறது. 50,000 விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று (15.10.2020) வெளியிடப்படுவதாக இருந்த இளங்கலை சேர்க்கை தரவரிசை பட்டியல்‌ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது தரவரிசை பட்டியல்‌ 23.10.2020 அன்றும்‌ மற்றும்‌ சிறப்பு தரவரிசை பட்டியல்‌ 28.10.2020 அன்றும்‌ வெளியிடப்படும்‌ என்று முனைவர்‌ மா. கல்யாணசுந்தரம்‌, முதன்மையர்‌ (வேளாண்மை) மற்றும்‌ தலைவர்‌ (மாணவர்‌ சேர்க்கை) அவர்கள்‌ தெரிவித்தார்‌.

மேலும் படிக்க