• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழம் பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் காலமானார்

March 26, 2016 முகமது ஆஷிக்

கே.எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கிய கற்பகம் திரைப்படம் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கே.ஆர்.விஜயா. இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் தொழிலதிபரான வேலாயுதம் என்பவருக்கும் கடந்த 1968 ஆம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த வேலாயுதம் இன்று காலை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல தொழிலதிபரான இவர், சிவாஜி போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் பல படங்களையும் தயாரித்துள்ளார். சுதர்சன் வேலாயுதம் கே.ஆர்.விஜயா தம்பதியருக்கு ஹேமலதா என்ற மகள் உள்ளார்.

மேலும் படிக்க