• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காரில் அமர்ந்தவரை கத்தியால் தாக்கி பணத்தை பிடுங்கி சென்ற மர்ம நபர்

September 16, 2020 தண்டோரா குழு

காரில் அமர்ந்திருந்த நபரை மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாயை பிடுங்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் டாடாபாத் 9 வது வீதியை சேர்ந்தவர் ஜோய்.இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வருபவர். இவர் கடந்த 14 ம் தேதி இரவு ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது நண்பரிடம் 2 லட்ச ரூபாய் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார். பணத்தை வாங்கி விட்டு காரில் அமர்ந்த படி நண்பரிடமும் அவரது மனைவியிடமும் பேசிக்கொண்டு இருந்தார்.

இந்நிலையில், திடீரென கையில் கத்தியுடன் வந்த இளைஞர் ஒருவர், ஜோயை கடுமையாக தாக்கினார். இதில் நிலை குலைந்த ஜோய் , காரின் மற்றொரு பகுதியில் உள்ள கதவை திறந்து கீழே விழுந்தார்.அப்போதும் விடாமல் வந்த அந்த நபர் ஜோயை கத்தியால் உடலின் பல பகுதிகளில் குத்தியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த ஜோய் அலறியதை கேட்டு , பொது மக்கள் ஒன்று கூடினர்.

இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த நபருடன் மர்மநபர் ஒடினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஜோய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க