பிரதமர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நீதிபதிகள் தொலைபேசி அழைப்புகளை மத்திய அரசு ஒட்டுகேட்பதாக தில்லி பிரதேச முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புகார் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி உயர் நீதிமன்றத்தின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டபட்டது. புது தில்லி விவிஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை (அக். 31) நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தாகூர், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். விழாவில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:
“தங்கள் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக நீதிபதிகள் சிலர் கவலையில் இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது உண்மையென்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.
நீதிபதிகள் தொலைபேசி அழைப்பு ஒட்டுகேட்கப்படுவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். நீதித்துறையின் சுதந்திரத்தில் அத்துமீறும் செயலாகும். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் “கொலீஜியம்” வழங்கிய பரிந்துரைகளை 9 மாதங்களாக அரசு கிடப்பில் போட்டுள்ளது. கொலீஜியத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது உகந்தது அல்ல.
அனைத்து அதிகாரங்களும் ஒருவரிடமே தேங்கிவிட்டால் நாடு சர்வாதிகாரத்தில் சிக்கக்கூடும். நீதிபதிகள் நியமனத்தில் காலம் தாழ்த்துவது அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையேயான இடைவெளியை மேலும் மேலும் அதிகரிக்கும்" என்று கேஜ்ரிவால் பேசினார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ஒரு சட்ட அமைச்சர் என்ற முறையில் கேஜ்ரிவால் முன்வைக்கும் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்கிறேன். நீதிபதிகள் நியமனத்தில் சுமுகமான முடிவு எட்டப்படுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டு வருகிறது” என்றார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது