உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விராட், இந்திய கடற்படை சேவையில் இருந்து விடைபெறுகிறது.
இந்தியக் கடற்படையில் சுமார் 55 ஆண்டுகளும் கடற்படையில் 27 ஆண்டுகளும் பணிபுரிந்த மிக பழமையான விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்த ஆண்டின் இறுதியில் ஓய்வு பெறுகிறது.
கடற்படையில் இருந்து ஐஎன்எஸ் விராட் ஓய்வு பெற்றதும் அதை வாங்கி, விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிறுத்தி வைத்து, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஆந்திர மாநில அரசு விருப்பம் தெரிவித்தது. அதன் விருப்பத்தை கடற்படை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் விராட் ஞாயிற்றுக்கிழமை மும்பை துறைமுகத்தை நோக்கி தனது இறுதிப் பயணத்தை தொடங்கியது. மூன்று இழுவை கப்பல்கள் அதை இழுத்துச் சென்றபோது, இந்திய கடற்படையின் தென்னக கடற்படை கமாண்டர் ’ரியர் அட்மிரல், நட்கர்னி உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் அதற்கு பிரியாவிடை கொடுத்து அதை வழியனுப்பி வைத்தனர்.
மும்பையில் முறைப்படி அதற்கு பிரியாவிடை அளிக்கும் விழா நடத்தப்படும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது