June 30, 2020
தண்டோரா குழு
அரசின் விதிமுறைகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
கொரோனா காலத்தில் சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம்.பொது முடக்க தளர்வுகள் முதல் கட்டத்தில் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருந்ததை பார்க்க முடிந்தது. அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் இந்த பெருஞ்சோற்று காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களில், 31 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக 20 கோடி ஏழைக் குடும்பங்களின் ஜன தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 18 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி யோஜனா திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்க படுவதாகவும் இந்த காலகட்டத்தில் இலவசமாக ஏழைகள் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
கொரோனாவை எதிர்த்து போராடும் சூழலில் பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.இந்த காலத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது.பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் நமது நாட்டிலும் ஒரே விதிதான்.
தற்சார்பு பாரத திட்டத்தை செயல்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம் என்றார்.