June 29, 2020
தண்டோரா குழு
கோவையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனாவால் பதிக்கட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது. இதில் 187 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 339 பேர் இ.எஸ்.ஐ மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.