• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரம்: அதிமுக உள்பட அனைத்து கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு

October 22, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் காவிரி விவகாரம் குறித்து வரும் 25ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசை வலியுறுத்தி வந்தார். இதற்காக தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டவில்லை என்றால், திமுகவே அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கூட்டத்தை நடத்தும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க வருமாறு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், அனைத்து விவசாய சங்கத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வகையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி, அதிமுக பொதுச் செயலாளர் பெயருக்கும் மு.க. ஸ்டாலின் அழைப்புக் கடிதம் அனுப்பியதாகவும், அதனை அதிமுகவினர் வாங்க மறுத்தால் அதிமுக தலைமைக் கழக முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க