புதிதாக ரூ. 2000 நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வர இருக்கின்றன. இந்த ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இரண்டாயிரம் ரூபாய்க்கான நோட்டுகளை வெளியிடுவதற்கான பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி பூர்த்தி செய்துவிட்டது என்று தகவல் அறிந்தவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தற்போது அதிக மதிப்புள்ளதாக ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
இந்த நோட்டுகள் மைசூரில் உள்ள அரசு அச்சகத்தில் முதல் முறையாக அச்சிடப்பட்டு, தற்போது ரிசர்வ் வங்கிக்கு முறைப்படி அனுப்பப்படுகின்றன.
ஏற்கெனவே அதிகபட்ச மதிப்பில் 1938 ஆம் ஆண்டிலும், 1954 ஆம் ஆண்டிலும் ரூ. 10 ஆயிரத்துக்கான நோட்டுகளை ரிசர்வ் வங்கி தயாரித்து புழக்கத்திற்கு விட்டுள்ளது. கள்ளப் பணத்தை ஒழிக்கும் வகையில், ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ. 2000 மதிப்புக்கான நோட்டுகள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. அவற்றில், ஒரு ரூபாய் நோட்டுகள் முதல் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரை வெளியிடும் அதிகாரம் இந்திய அரசுக்கு உள்ளது. 50 பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ள நிலையில், அதற்குக் குறைவான நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. அதைபோல் அதிக பட்சமாக ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் குறித்து மத்திய அரசிடமிருந்தோ, ரிசர்வ் வங்கியிடமிருந்தோ அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்றும் கூறப்படுகிறது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது