• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

October 21, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் நடைபெற உள்ள 3 சட்டபேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016 ல் நடைபெற்ற சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெற்ற போது, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்புகார்கள் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம். சீனிவேல் உடல் நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால், அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் ஒரே நாளில், அதாவது நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தற்போது இந்த மூன்று தொகுதிகளுக்கும் திமுக சார்பில் போட்டியிட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தஞ்சையில் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, அரவக்குறிச்சியில் கே.சி. பழனிச்சாமி, திருப்பரங்குன்றத்தில் மருத்துவர் சரவணன் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தஞ்சையில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதி மற்றும் அரவக்குறிச்சியில் போட்டியிடும் கே.சி. பழனிச்சாமி ஆகியோர் கடந்த முறை சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் ஆவர்.

மேலும் படிக்க