June 1, 2020
தண்டோரா குழு
கோவையில் தகராறு வாலிபரை தட்டிக்கேட்ட கட்டிடத்தொழிலாளி குத்திக்கொலை
கோவையில் குடிபோதையில் தகராறு செய்துகொண்டிருந்த வாலிபரை தட்டிக்கேட்ட கட்டிடத்தொழிலாளியை குத்திக்கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிகண்ணு என்பவரது மகன் சென்னையன்(42). கட்டிடத்தொழிலாளியான சென்னையன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அதேபகுதியைச் சேர்ந்த சொக்கன் என்பவரது மகன் அசோக்குமார் குடிபோதையில் அப்பகுதியில் தங்கியுள்ள தனது தாய் மற்றும் பக்கத்து வீட்டாருடன் தகராறு செய்து கொண்டிருந்தார். இரவில் தூங்கிகொண்டிருந்த சென்னையன், அசோக்குமார் குடிபோதையில் கூச்சலிடுவதைக்கேட்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அசோக்குமார் தனது மாமா மற்றும் அப்பக்குதி குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்துகொண்டிந்ததோடு, தனது தாயையும் தாக்கியதில் தாயும் காயமடைத்தார்.
இதுகுறித்து சென்னையன் தட்டிக்கேட்ட சென்னையனும் அசோக்குமாரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து அசோக்குமாரை அப்பகுதியில் அதேபகுதியிலிருந்த வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.அங்கு ஒரு கத்தியை எடுத்துமறைத்துக்கொண்டு வெளியேவந்த அசோக்குமார் கண்இமைக்கும் நேரத்தில் வெளியில் நி்ன்றிருந்த சென்னையில் நெஞ்சுப்பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சென்னையில் உயிரிப்போரடினார்.
இதனையடுத்து சென்னையை மீட்ட அக்கம்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் வரும் வழியிலேயே சென்னையன் இறத்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கட்டிடத்தொழிலாளியை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய அசோக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.