• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா தொற்று – 13 பேர் உயிரிழப்பு

May 31, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று புதிதாக 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 1,054. பிற நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்
13 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 173 ஆக உள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் மொத்தம் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 12,757 பேர் குணமடைந்துள்ளனர்.இன்றைய தேதியில் மொத்தம் 9,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று ஒருநாள் மட்டும் 12,049 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,69,282 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க