• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 6 பேர் பலி

May 27, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545ஆக உயர்ந்தது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று மேலும் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 678 பேர் தமிழகத்திலும்,138 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும்,ஒருவர் கேரளாவில் இருந்தும் வந்தவர்கள்.இதனால் மொத்த பாதிப்பு 18,545 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் மட்டும் இன்று 558 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் 4 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 6 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 133 ஆக உள்ளது.அதேசமயம்
567 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9,909 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க