• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தட்டச்சு மற்றும் கணிணி பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க அனுமதி மாவட்ட ஆட்சியரிடம் மனு

May 26, 2020 தண்டோரா குழு

தட்டச்சு மற்றும் கணிணி பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்க கோரி கோவை மாவட்ட தட்டச்சு மற்றும் கணிணி பள்ளிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்த வேண்டி மத்திய மாநில அரசுகளால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் அனைத்து சேவைகளும் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில் சென்னையை தவிர கோவை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா கட்டுபடுத்தப்பட்டுள்ளதால் மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்திருந்தது. அதன் படி கோவையில் தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தட்டச்சு மற்றும் கணிணி பயிலங்களை மீண்டும் திறக்க கோரி தட்டச்சு மற்றும் கணிணி பள்ளிகள் சங்கம் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசமணியிடம் மனு அளிக்கப்பட்டது.

IMG-20200525-WA0096

மாநில தலைவர் கலைவாணன் மற்றும் கோவை மாவட்ட தலைவர் கண்ணையன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து வழங்கிய மனுவில் அரசின் உத்தரவுப்படி சமூக விலகலை கடைபிடித்து பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பட்டு இருந்தனர்.

மேலும் படிக்க