• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய அறக்கட்டளை

May 15, 2020 தண்டோரா குழு

மாற்றுத்திறனாளி பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் விதமாக கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஊக்கதொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை தடாகம் பகுதியில் உள்ள முத்து எம்ப்வர் அறக்கட்டளை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக பயிற்சி பட்டறை நடைபெற்று வருகிறது. சமுதாயத்தில் அனைத்து பிரிவினருக்கும் சமமான முறையில் பணி செய்யும் நோக்கத்தில் நடத்தி வரும் இந்த பயிற்சி பட்டறையில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஆண்கள் பெண்கள் ஆகியோர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய நிலையில் தொழில் துறை மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக முத்து எம்பவர் அறக்கட்டளை சார்பாக அதன் நிர்வாக அறங்காவலர் சிந்துஜா மற்றும் போரே கவுடர் திருமண மண்டபத்தின் உரிமையாளர் டாக்டர் ப்ரீத்தி லட்சுமி ஆகியோர் இணைந்து மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ரூபாய் ஆயிரத்திற்கான காசோலை மற்றும் அரிசி, பருப்பு,சமையல் எண்ணெய் அடங்கிய மளிகை நிவாரண உதவி பொருட்களையும் வழங்கினர். கே.என்.ஜி்.புதூரில் உள்ள சுசின் டெக்னாலஜிஸ் வளாகத்தில் நடைபெற்ற இதில் கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.

மேலும் படிக்க