• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேறு மாவட்டத்திற்கு செல்லும் அனைவரும் 14 நாள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் – தமிழக அரசு

May 14, 2020 தண்டோரா குழு

வேறு மாவட்டத்திற்கு செல்லும் அனைவரும் 14 நாள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துவது குறித்த வழிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,

ஒரு மாவட்டத்திலிருந்து,மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை நடத்தப்படும்.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்படும்.சோதனை உறுதி செய்யப்பட்டால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வந்து, உடனடியாக மருத்துவமனை செல்பவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்களுக்கும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்
படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க