May 13, 2020
தண்டோரா குழு
ஊடங்கு அமலில் உள்ள நிலையிலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பட்டியல், தலீத் இன மக்கள் மீது ஆதிக்கவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி போன்ற ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலீத் பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் ஆதிக்க வாதிகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் விழுப்புரத்தில் மாணவி ஒருவரை எறித்த குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
இது குறித்து பேசிய திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி,
ஊரடங்கு பிறபிக்கப்பட்ட 40 நாட்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டியல் மற்றும் தலீத் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் சாதி ரீதியான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆதிக்க சாதியினர் பட்டியல் தலீத் மக்கள் மீது 10க்கும் மேற்பட்ட கொலைகள், 12க்கும் மேற்பட்ட தனி நபர் தாக்குதல்கள், 5க்கும் மேற்பட்ட கும்பல் தாக்குதல்கள் நடத்தி உள்ளனர். இது கரோனா வைரஸை விட மிக கொடியது, மத்திய அரசு தமிழ்நாட்டை தீண்டாமை மிக்க மாநிலமாக அறிவிக்க வேண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட ஜெயஸ்ரீ மாணவியின் வழக்கை காலம் தாழ்த்தாமல் 90 நாட்களுக்குள் முடித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.