• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான்காம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் – பிரதமர் மோடி

May 12, 2020 தண்டோரா குழு

நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி மே 18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் கொரோனா ஊரடங்கு தொடர்பாக நாட்டு மக்களிடையே 4 வது முறை
பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

ஒரே ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கி எடுத்து வருகிறது.கொரோனா தொற்று ஏற்பட்டு 4 மாதங்கள் கடந்துவிட்டது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது. நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.யாரும் எதிர்பாராத விபரீதம் இது. ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 42 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் கொரோனாவால் மரணித்திருப்பது வேதனை தருகிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பெரும் ஆபத்தில் இருக்கின்றனர்

நாம் இதற்கு முன்னர் இப்படியான ஒரு பேரிடரை கேள்விபட்டதும் பார்த்ததும் இல்லை.கொரோனா போன்ற தாக்குதல் நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கொரோனா வைரஸ் முன்னதாக நம் மனித இனம் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளத்தான் முடியும். நாடு இதுவரை எதிர்கொள்ளாத மாபெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது.கொரோனா பாதிப்பின் தொடக்கத்தில் தடுப்பு உபகரணங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை.மிக குறைந்த அளவிலான என் 95 முக கவசங்களே இந்தியாவில் இருந்தன.தற்போது 2 லட்சம் கொரோனா தடுப்பு உபகரணங்கள், 2 லட்சம் என் 95 முக கவசங்கள் நாள்தோறும் தயாரிக்கப்படுகின்றன.

கொரோனா விவகாரத்தில் உலகிற்கே இந்தியா ஒரு நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது. இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.உள்நாட்டு சந்தையை நோக்கி நகர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான்காம் கட்ட ஊரடங்குக் பற்றி மே .18க்குள் உங்களுக்குள் தெரிவிக்கப்படும். மேம்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஊரடங்காக நான்காம் கட்ட ஊரடங்கு இருக்கும்.

மேலும் படிக்க