• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா சமூக பரவலாகி விட்டதா? தமிழகத்தில் கோவை உட்பட 3 இடங்களில் ICMR ஆய்வு நடத்த திட்டம்!

May 12, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 70756 ஆக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், நோய் பரவல் வேகமெடுத்துக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக பரவல் தொடங்கிவிட்டதா என கண்டறிய இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இந்தியாவின் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து ஆய்வு நடத்துகிறது.மாவட்டத்தின் 10 இடங்களில் இருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய
திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க