May 9, 2020
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்.22ல் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த ஷாகின்பாக் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
கலந்து கொண்டு பேசினார்.அப்போது
வெறுப்பு உணர்ச்சியை தூண்டும் வகையில் சீமான் பேசியதாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின்அடிப்படையில் தேசத்திற்கு எதிராக பேசுதல், இரு பிரிவினருக்கு மோதல் தூண்டுதல் 124 ஏ, 153 ஏ ஆகிய இரண்டு பிரிவுகளில் குனியமுத்தூர்போலீசார் சீமான் மீது தேச துரோக
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.