May 8, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உதத்திரவு அமலில் உள்ளது.இதற்கிடையில், தமிழகத்தில் மே7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், தனிநபர்களுக்கு மட்டும் மது விற்கப்படும்.இணையவழியில் விற்பனை செய்ய முடியாது.அதே நேரத்தில் மது விற்பனையின்போது பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து,டாஸ்மாக் கடைகள் திறப்பதற்குத் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதையடுத்து, தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 170 கோடிக்கு மது விற்பனையானது. இதற்கிடையில்,டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த
நீதிமன்றம் தமிழகத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட உத்திரவிட்டுள்ளது. மேலும்,மே 17 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்றும் ஆன்லைனில் மட்டும் மது விற்பனையைத் தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.