• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கோவையில் முகநூல் வாயிலாக நேரலை ஆராதனை

April 12, 2020 தண்டோரா குழு

கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் பண்டிகை நாளான இன்று 144தடை உத்தரவு அமலில் உள்ளதால் தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் முகநூல் வாயிலாக நேரலை ஆராதனை நடைபெற்றது.

கிறித்தவர்களின் முக்கியமான ஒரு பண்டிகையாக ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாகக் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில் உலக முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் 1மாதத்திற்கு மேலாக விரதம் இருந்து ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டாடுகின்றனர். தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் கோவையில் உள்ள பல தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஆயர் தலைவர் பர்னபாஸ் உதவி ஆயர் நெல்சன் சதீஷ்குமார் தலைமையில்ஆட்கள் இல்லாமல் மொபைல் வாயிலாக முகநூல் நேரலை ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சபையை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் தங்களது முகநூல் வாயிலாக இந்த ஆராதனையில் கலந்து கொண்டனர். கடந்த நூறு ஆண்டுகளில் இந்த மாதிரி ஆராதனை நடைபெற்றது இதுவே முதன் முறையாக என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க