• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொலைநிலைக் கற்பித்தலுக்கு மாறிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

April 10, 2020 தண்டோரா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து முதுநிலை பட்டப்படிப்புகளையும் தொலைநிலை கற்பித்தலுக்கு மாற்றியது.

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட இந்த நெருக்கடியின் போது தொலைநிலை கற்பித்தல் திட்டத்தை தொடங்குவதன் மூலம் முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு தடையற்ற கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நாட்டிலேயே முன்னோடியாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க மத்திய அரசானது 21 நாள் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்தம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இக்காலகட்டத்தில் மாணவர்தம் கல்வி பாதிக்கப்படாத வண்ணம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது பல்ககைலக்கழக துணைவேந்தர் முனைவர் நீ. குமார் வழிகாட்டுதலின் படி தொலைநிலைக் கற்பித்தலை 08.4.2020 முதல் நடைமுறைப் படுத்தியுள்ளது. இது ஒரு எளிய தொடர்பு தொகுதி “மைக்ரோசாப்ட் கற்பித்தல்” முறையின் மூலம்; வகுப்பெடுத்தலின் பிரதியானது நேருக்கு நேராக கிடைக்கிறது.

தொலைநிலைக் கற்பித்தல் முறையை தொடங்கி வைத்த பல்கலைக்கழக துணைவேந்தர் இதன் மூலம் 33 பிரிவுகளைச் சேர்ந்த 344 முதுநிலை மாணவர்கள் மற்றும் 29 பிரிவுகளைச் சேர்ந்த 172 முனைவர் பட்ட மாணவர்களும் பயன்பெறுவார்கள் என்றும் ஆசிரியர் மாணவர் தொடர்பானது சிறப்பாக செயல்பட இது ஒரு புது வழிமுறை என்றும் குறிப்பிட்டார்.பல்கலைக்கழக முதன்மையர் (முதுநிலைக் கல்வி) முனைவர் கென்னடியின் முயற்சியின் காரணமாக இத்தொலைநிலைக் கற்பித்தல் முறை சாத்தியப்பட்டுள்ளது என்றார்.

வேலை நாட்களில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இருந்த போதிலும் நாம் கொரோனா தொற்று நோயின் இடைக்கால இடையூறுகளை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. உலகெங்கிலும் செய்யப்படுவது போல தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கற்பித்தலை பாரம்பரிய வகுப்பறையிலிருந்து தொலைநிலை கற்பித்தல் பயன்முறைக்கு மாற்றுவது காலத்தின் கட்டாயமாகும்.

மேலும் படிக்க