April 9, 2020
தண்டோரா குழு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக
பி.எஸ்.ஜி கல்வி குழுமங்களின்
சார்பாக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை அமைச்சர் வேலுமணியிடம் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பல்வேறு , சேவை அமைப்புகள் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கோவை பி.எஸ்.ஜி கல்வி குழுமங்களின் சார்பாக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் வேலுமணியிடம் பி.எஸ்.ஜி கல்வி குழுமங்களின் அறங்காவலர் கோபால கிருஷ்ணன் வழங்கினார்.
இதனையடுத்து பத்திரிக்கை யாளர்களிடம் பி எஸ் ஜி அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில்,
ஈ. எஸ் ஐ மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 20 லட்சம் மதிப்பில் முககவசம் கேட்டிருப்பதாகவும், அதனை கூடிய விரைவில் வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா சிகிச்சைக்காக 200 படுக்கைகள் தயாராக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப்பிரிவில் 10 படுக்கைகள் வெண்டிலேட்டர் வசதியுடன் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அரசு கொரொனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பி எஸ் ஜி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திலுள்ள 800 படுக்கை வசதிகளையும் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதனையடுத்து பி .எஸ் .ஜி மருத்துவமனையின் பொது மேலாளர் ஜெகநாதன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது,
பி எஸ் ஜி மருத்துவமனையில் கொரொனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு தனி கட்டிடம் இருப்பதால், மற்ற நோயாளிகளுக்கு பிரச்சனை இல்லை எனவும், இதுக்கு தனி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருப்பதாகவும், தினமும் 300 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் , அனைத்து நோயாளிகளுக்கும் உதவ 24 மணி நேரமும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.