April 9, 2020
தண்டோரா குழு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு,கொரொனா தொற்றின் அறிகுறி இருக்கிறதா,என்பது குறித்து சுகாதாரத் துறையினர், இஸ்லாமிய கூட்டமைபுகளின் உதவியோடு பரிசோதனை செய்து வருகின்றனர்.
கொரொனா தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரையும்,ஒரே இடத்திற்கு வரவழைத்து அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் ஜமாத்தின் கூட்டமைப்பு சார்பாக மருத்துவ பரிசோதனை போத்தனூரிலுள்ள அரபு பள்ளி வாசலில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது ,
மருத்துவர்கள் பரிசோதனை நடைபெற்று வருவதில் பெரும்பாலானவர்களுக்கு தொற்று இல்லை என தெரிய வருகிறது. இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து மருத்துவ பரிசோதனை செய்ய வரும் சுகாதார மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இஸ்லாமிய கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஜமாத் சார்பாக முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்ய வந்த மருத்துவ குழுவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருப்பதாகவும் கூறினர்.
மேலும்,ஈ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரொனா உறுதிபடுத்தப்பட்ட 21 பேருக்கும் மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ உதவிகளை செய்து வருவதாகவும், கொரொனா தொற்று இருக்கலாம் என சந்தேகப்பட்டு தனியார் பள்ளியில் வைக்க்ப்பட்டுள்ள 13 பேருக்கும் மாவட்ட நிர்வாகம், மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பாக , மருந்தும், உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும்,தனிமைப் படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டி 13 நாட்கள் ஆவதாகவும்,இவர்களுக்கு கொரொனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்து , இல்லையெனில்,நோய் தொற்று இல்லை என மாவட்ட நிர்வாகம் அந்தந்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.மாவட்ட நிர்வாகத்திடம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத்கள் சார்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. கொரொனா தொடர்பான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளுக்கு இஸ்லாமிய கூட்டமைப்புகளை அணுகினால் மாவட்ட நிர்வாகத்தோடு பேசி அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும்,அரசின் கொரொனா ஒழிப்பு நடவடிக்கைக்கு , இஸ்லாமிய இயக்கங்கள் முழு ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.