• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான முதல் மருத்துவர்

April 9, 2020 தண்டோரா குழு

இந்தியாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதித்த டாக்டர் உயிரிழந்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 5 ஆயிரத்து 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 473 பேர் குணமடைந்துள்ளதாகவும்,166 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 1135 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 72 பேர் உயிரிழந்துள்ளனர், 117 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் இன்று (ஏப்.,09) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த முதல் டாக்டர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க