• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுமக்கள் இந்த நோய்தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

April 9, 2020 தண்டோரா குழு

பொதுமக்கள் இந்த நோய்தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் ஏழை எளிய மக்களுக்கான விலையில்லா காய்கறிகளை வழங்கியப்பின் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து முதல்வர் அறிவித்த ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில் தாங்கள் விளைத்த விவசாயப் பொருட்களை எடுத்துச் செல்ல விவசாயகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் ஏழு உழவர்கள் சந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

45 வட்டார தோட்டகலை மூலம் 15 வாகனங்கள் மூலம் காய்கறிகள் வீடுதோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோவை விவசாயிகள் குளிர்பாதனகிடங்குகளை 30-04-2020 வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அம்மா உணவகத்தில் மட்டும் 20,000 ககும் மேற்பட்டோர் உணவறிந்து வருகின்றனர். வெளிமாநிலத்தவர்கள் 18,000 க்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

சமூக இடைவெறியை கடைபிடிக்க வேண்டும், அவசியம்மில்லாமல் வெளியே வரக்கூடாது. பொதுமக்கள் இந்த நோய்தொற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. 98 சதவீதம் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் . ஆனால் 2சதவீதம் பேர் இன்னும் நோய் தொற்று குறித்து கவலைப்படாமல் இருக்கிறார்கள். நோய்தடுப்பு நடவடிக்கைக்காக காருண்யா 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை இன்று ஒப்படைக்கின்றனர். முதல்வர் தேவையான நிதியை ஒதுக்கி வருகிறார்.மேலும் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்துள்ளார் என்றார்.

மேலும் படிக்க