• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இதயம் கணிக்குமா?, கண்கள் பணிக்குமா? என தி.மு.க தொண்டர்கள் எதிர்பார்ப்பு.

March 24, 2016 வெங்கி சதீஷ்

தமிழகத்தில் மக்களின் தற்போதைய பேச்சே தி.ம.க குறித்துத்தான். அவர்களின் நிலை இந்தளவிற்கு மோசமாகப் போகும் எனத் தொண்டர்கள் கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்தளவிற்குக் கூட்டணிக்காக ஒரு சிலரை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது. முதன் முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது மற்ற கட்சிகளை யோசிக்க வைத்தது.

இந்தக் கூட்டணியில் சேர்ந்தால் நம்முடைய சொந்த ஓட்டும் போய்விடும் எனக் கட்சிகள் கணக்குப் போட ஆரம்பித்தன. இந்நிலையில் இதுநாள் வரை எதிரும் புதிருமாக இருந்த கருணாநிதியும் அவரது மகன் அழகிரியும் இன்று நேருக்கு நேர் சந்தித்து பேசியுள்ளனர். இது குறித்து தி.மு.க செய்தி தொடர்பாளர் கூறும்போது, செய்திகள் மூலமாகத்தான் எனக்கே தெரியும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது கலைஞரின் விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இது வரை அழகிரியைப் பற்றி வாய்திறக்காத ஸ்டாலினும் அவர் தந்தையையும் தாயையும் பார்த்துப் போக வந்துள்ளார் எனக் கருத்து தெரிவித்துள்ளார். இதிலிருந்தே அவரைக் கட்சியில் மீண்டும் இணைக்கத் திட்டம் தீட்டியுள்ளனர் என்பது தெரியவருகிறது. ஒவ்வொருமுறையும் யாரையாவது நீக்கிவிட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கும்போது கலைஞர் இதயம் கனத்தது, கண்கள் பணித்தது எனவே மீண்டும் தாய்வீடு திரும்பியுள்ளார் எனக் கூறுவது வழக்கம். அதே போன்ற வசனம் விரைவில் வரும் எனக் கட்சியினர் பலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதே சமயம் அழகிரிக்காக தி.மு.கவை பகைத்துக் கொண்டவர்களின் நிலைதான் பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் தி.மு.கவில் ஒரு வித பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும் படிக்க