April 4, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் வேகம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை நேற்று மாலை வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது.
இதற்கிடையில்,கொரோனா பாதிப்பால், விழுப்புரத்தில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (வயது 51) பலியானார். இவர், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்து பிறகு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு மூச்சுத்திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணி அளவில் உயிரிழந்தார்.